BBC News, தமிழ் - முகப்பு
Top story

யுக்ரேன் பதிலடித் தாக்குதல்: முக்கிய நகரில் இருந்து பின்வாங்கிய ரஷ்யா
இது மாதிரியான தோல்விகளை எதிர்கொள்ளும்போது ரஷ்யா குறைந்த சக்தி கொண்ட அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும் என செச்சென் குடியரசின் தலைவரும் கடும்போக்கு மாஸ்கோ கூட்டாளியுமான ரம்ஜான் கதிரோவ் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய உள்ளடக்கம்
காந்தி ஜெயந்தி ஊர்வலத்தில் ஆர்.எஸ்.எஸ். சீருடையோடு கலந்துகொண்ட புதுவை அமைச்சர்கள்
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் புதுச்சேரி மாநிலத்திற்கு உள்பட்ட பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் இன்று நடைபெறுகிறது.
5ஜி நெட்வொர்க் அறிமுகம்: இந்தியாவில் இதன் தாக்கம் எப்படி இருக்கும்?
முதற்கட்டமாக இந்தியாவின் அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, காந்திநகர், குருகிராம் மற்றும் ஹைதராபாத் ஆகிய 8 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படும்.
இந்தோனீசிய கால்பந்து போட்டியில் கலவரம்: குறைந்தது 174 பேர் பலி
கால்பந்து ரசிகர்களிடையே அங்கு மூண்ட கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு பயன்படுத்தியதால் அதிலிருந்து கால்பந்து ரசிகர்கள் தப்பியோட முயன்ற போது இந்த கூட்ட நெரிசல் உண்டானது.
எஜமானரின் மூச்சுக் காற்றை மோப்பம் பிடித்து, மன அழுத்தத்தை உணரும் நாய்கள்
வியர்வையையோ, மூச்சுக் காற்றையோ மோப்பம் பிடித்து ஒரு நபர் மன அழுத்தத்தில் இருப்பதை நான்கு நாய்கள் வெற்றிகரமாக அடையாளம் கண்டுள்ளன.
காந்தி ஜெயந்தி: உலகம் முழுவதும் காந்தி சிலைகளை உடைத்தவர்கள் யார் யார்?
இன்று மகாத்மா காந்தி பிறந்தநாள். காந்தி உலகம் முழுவதிலும் இருக்கிறார். குறைந்தபட்சம் சிலை வடிவில் அவர் உள்ளார். உலகில் சுமார் 70 நாடுகளில் காந்தியடிகளின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
ரஷ்யாவை முடக்கும் அமெரிக்காவின் புதிய தடைகள் - புதின் என்ன செய்வார்?
யுக்ரேன் பிராந்தியங்களை இணைப்பதற்கான ஒப்பந்தங்களில் அதிபர் புதின் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
நிலத்தடியில் 20,000 மக்கள் வசித்த ரகசிய நகரம் - கோழிகள் மூலம் உலகிற்கு தெரியவந்தது எப்படி?
கப்படோசியாவின் இடிந்து விழும் மேற்பரப்பிற்கு கீழே, 20,000 மக்களின் வாழ்விட ரகசியத்தை மறைத்து வைத்திருக்கும் ஒரு நிலத்தடி நகரம் பல நூற்றாண்டுகளாக மறைந்திருந்தது.
காணொளி, பார்வை இழக்கவிருக்கும் குழந்தைகள் - உலகத்தை சுற்றி காட்டும் பெற்றோர், கால அளவு 3,02
கனடாவைச் சேர்ந்த இந்த குடும்பம் நமீபியா, ஜாம்பியா, தான்சானியா, துருக்கி, மங்கோலியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர். இதற்கு ஒரு பிரத்யேக காரணம் உண்டு.
ராணி இரண்டாம் எலிசபெத் - நினைவலைகள்
ராணி இரண்டாம் எலிசபெத்: நீண்ட வரலாற்று சகாப்தம்
ராணி இரண்டாம் எலிசபெத் 70 ஆண்டுகள் ஆட்சி செய்து, நீண்ட வரலாற்று சகாப்தம் படைத்த அரசியாக புகழ் பெறுகிறார்.
ராணி இரண்டாம் எலிசபெத்துக்கும் விண்ட்சர் கோட்டைக்கும் உள்ள சிறப்புத் தொடர்புகள்
இந்த அரச மாளிகையின் முக்கியத்துவம், கோட்டையின் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் ராணிக்கு நடந்த கடைசி அர்ப்பணிப்பு சேவை நாளில் சிறப்பிக்கப்பட்டது. நீண்ட காலம் ஆட்சி செய்த பிரிட்டிஷ் ராணியின் நல்லடக்கம் இங்கு செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற்றது.
பிற செய்திகள்
பொன்னியின் செல்வன் கட்டுரைகள் தொகுப்பு: திரையில் '1950களின் புதினம்'
பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற வரலாற்றில் உள்ள பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கிய தமிழ் புதினமாகும். 1950 - 1955-ஆம் ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது.
தர்ஷன் தர்மராஜ்: பிரபாகரன் வேடத்தில் நடித்த இலங்கை தமிழ் நடிகர் காலமானார்
திரைப்படங்களில் சிறப்பாக நடித்தமைக்காக பல்வேறு விருதுகளை வென்ற தர்ஷன், பலராலும் அவதானிக்கப்பட்ட 'பிரபாகரன்', 'சுனாமி' உட்பட 25க்கும் மேற்பட்ட சிங்கள மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.
இந்தியாவில் ஓராண்டில் 14 சமூக செயற்பாட்டாளர்கள் கொலை – குளோபல் விட்னஸ் அறிக்கை
குளோபல் விட்னஸ் அறிக்கைப்படி, உலகளவில் கடந்த ஓராண்டில் 200 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த ஓராண்டில் 14 சமூக, சூழலியல் செயற்பாட்டாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களின் பெயர்கள் கொண்ட கல்வெட்டுகள்
எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் சரித்திர புகழ்பெற்றது. இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டுக்களில் இடம்பெற்றுள்ளன.
"தீட்சிதர்கள் மீதான வன்கொடுமை வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தினார்கள்"
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண்ணை சாதி பெயரைக் கூறி திட்டியதாகக் கூறப்படும் விவகாரத்தில் வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து விசாரணை அதிகாரி மாற்றப்பட்டுள்ளார். நடந்தது என்ன?
இந்தியா விடுதலை அடைந்த போது காந்தி எங்கு, என்ன செய்து கொண்டு இருந்தார்?
வன்முறை, கலவரம், கொள்ளை, சூறையாடல், படுகொலை, ஊரடங்கு உத்தரவு என தலைநகரின் தலையாய பிரச்சனைகளை பட்டியலிட்டார் நேரு. உணவு பொருட்கள் இல்லாமல் தவிக்கும் மக்களின் நிர்கதி, மக்களின் மனதை மரத்துப் போகச்செய்தது. தலைநகரில் இப்படி என்றால் பாகிஸ்தானில் இருக்கும் இந்துக்களின் நலனை பாதுகாப்பது எப்படி?
ரெப்போ வட்டி விகித உயர்வு உங்கள் செலவுகளை எப்படி பாதிக்கிறது?
இந்தியாவின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஆறு மாதங்களில் நான்கு முறை ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜாவின் மர்ம உயிலும் ரூ.20,000 கோடி சொத்தும் - 30 ஆண்டுகளுக்குப் பிறகு 'ட்விஸ்ட்'
20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு உரிமை கோரும் விவகாரம் தொடர்பான மூன்று தசாப்த கால அரச குடும்பப் பகை அண்மையில் இந்திய உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. என்ன நடந்தது இந்த விவகாரத்தில்?
கருப்பையை சுத்தம் செய்யும் 'டி அன்ட் சி' சிகிச்சை - நன்மைகளும் ஆபத்துகளும்
மருத்துவ மொழியில் 'டைலேஷன் அன்ட் க்யூரட்ரேஜ்' (டி அன்ட் சி) என அழைக்கப்படும் கருப்பையை சுத்தம் செய்யும் சிகிச்சை மிகச் சிறிய நடைமுறைதான் என்றும் 35 வயதைத் தாண்டிய பெண்களுக்கு இந்த சிகிச்சை தேவைப்படுவதாகவும் மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சண்டை போட்டு பஸ்ஸில் டிக்கெட் வாங்கிய மூதாட்டி தொடர்பாக புகார் – என்ன நடந்தது?
இலவசமாகப் பயணம் செய்ய முடியாது என்று ஒரு மூதாட்டி கூறும் காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், அதை அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவே திட்டமிட்டுச் செய்ததாக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காணொளி, இரட்டைக் குழந்தைகள் அதிகமாகப் பிறப்பதற்கு செயற்கை கருவூட்டல் காரணமா?, கால அளவு 6,09
இரட்டைக் குழந்தைகள் அதிகமாகப் பிறப்பதற்கு செயற்கை கருவூட்டல் காரணமா?
காணொளி, மூன்லைட்டிங் என்றால் என்ன? ஐ.டி. நிறுவனங்களில் இது புயலைக் கிளப்பியிருப்பது ஏன்?, கால அளவு 7,26
மூன்லைட்டிங் என்றால் என்ன? ஐ.டி. நிறுவனங்களில் இது புயலைக் கிளப்பியிருப்பது ஏன்?
காணொளி, பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களின் பெயர்கள் கொண்ட கல்வெட்டுகள், கால அளவு 4,36
பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களின் பெயர்கள் கொண்ட கல்வெட்டுகள்
காணொளி, பரந்தூர் விமான நிலைய நில எடுப்பு: "இறந்த மகன் கட்டிக்கொடுத்த வீடு மணி மண்டபம் மாதிரி", கால அளவு 3,06
பரந்தூர் விமான நிலைய விவகாரம்: "இறந்து போன மகன் கட்டிக்கொடுத்த வீடு எனக்கு மணி மண்டபம் மாதிரி"
காணொளி, இந்தோனீசிய கால்பந்து போட்டியில் கலவரம்: குறைந்தது 174 பேர் பலி, கால அளவு 2,41
இந்தோனீசியாவின் கிழக்கு ஜாவாவில் கால்பந்து போட்டி ஒன்றின் பின் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக குறைந்தது 174 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காணொளி, 5ஜி சேவையின் முன்மாதிரியை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோதி, கால அளவு 1,48
டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 6ஆவது இந்திய மொபைல் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் அதிவேக இணைய வசதியை அளிக்கும் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தினார்.
காணொளி, தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகள் - அசாமில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம், கால அளவு 2,52
அசாமில் வசிக்கும் நிர்மலிக்கு, அவரது மகளே திருமணம் செய்து வைத்த கதை இது.
காணொளி, எஸ்.ஜானகி குரலில் பாடி மகிழ்விக்கும் கோத்தகிரி தேயிலை தொழிலாளி, கால அளவு 4,49
இசையை முறையாக கற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்றாலும், கேள்வி ஞானத்தால் தன்னைத்தானே மெருகேற்றிக்கொண்டு பாடல்கள் பாடி அசத்துகிறார் கோத்தகிரியில் தேயிலை தோட்டத் தொழிலாளராக இருக்கும் ரெஜினா லூகாஸ்.
காணொளி, குந்தவையின் பழையாறை நகரம் எப்படி இருக்கிறது?, கால அளவு 5,41
பொன்னியின் செல்வன்: குந்தவையின் பழையாறை நகரம் எப்படி இருக்கிறது? சுவாரசியத் தகவல்கள்.
விலைவாசி உயர்வு - சிறப்புக் கட்டுரைகள்
விலைவாசி உயர்வு: இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடி உலக நாடுகளுக்கும் பரவுமா?
ஒவ்வொரு காலகட்டத்திலும் விலைவாசி உயர்வு என்பது இயல்பான ஒன்று. ஆனால், இந்த முறை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன.
சிங்கப்பூரை அச்சுறுத்தும் உணவுப் பற்றாக்குறை: எப்படி சமாளிக்கிறது சின்னஞ்சிறு நாடு?
சுய உற்பத்தித் திட்டமானது, நெருக்கடியான தருணங்களில் ஓரளவு கைகொடுக்கும் என்றாலும், அந்நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதிகளுக்கு மாற்றாக அமைந்துவிடாது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உயரும் விலைவாசி, சரியும் இந்திய ரூபாய் மதிப்பு - உண்மை நிலை என்ன?
சமீப காலமாக உலகம் முழுவதுமே பணவீக்கம் அதிகரித்துள்ளது. கோவிட் தொற்றுநோய் பாதிக்கப்பட்ட விநியோகச் சங்கிலி முதல் சமீபத்திய ரஷ்ய-யுக்ரேன் போரால் எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்தது வரை இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
பொருளாதார மந்தநிலை எனும் 'பேய்' வரப்போகிறதா?: எச்சரிக்கும் சமிக்ஞைகள்
மந்தநிலையின் பிடியில் சிக்கினால் பல ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம். முதலீட்டுச் சூழல் பாதிக்கப்படலாம். நுகர்வு மற்றும் பரிவர்த்தனைகள் குறைவதால் பல நிறுவனங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்படலாம். வேலைகள் குறையும். மக்களும் வணிக நிறுவனங்களும் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறுவார்கள். மேலும் பலர் திவாலும் ஆகலாம்.
"குழந்தைக்கு பால் கூட வாங்க முடியாமல் தவிக்கிறேன்" - ஓர் இலங்கை தாயின் கண்ணீர் கதை
நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சுற்றுலாத்துறை கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலால் பாதிக்கப்பட்டதும், யுக்ரேனில் நடத்தும் வரும் போரால் தொடர்ந்து உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலையுயர்வும் இலங்கையை மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது.
இலங்கை நெருக்கடி நிலை இந்தியாவில் வருமா? என்ன சொன்னார் ஜெய்சங்கர்?
இலங்கை நெருக்கடி தொடர்பாக விளக்குவதற்காக இந்திய அரசு ஏற்பாடு செய்திருந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக சார்பில் டி.ஆர். பாலு கலந்து கொண்டார். இலங்கைக்கு தமிழக அரசு வழங்கி வரும் உதவிகளை பட்டியலிட்ட அவர், கச்சத்தீவை மீட்பது, தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்படும் பிரச்னை குறித்தும் பேசினார்.
நிர்வாணப் படங்களை விற்பனை செய்யும் ரகசிய உலகம் – பிபிசி புலனாய்வில் வெளியான தகவல்கள்
சமூக ஊடக தளமான ரெடிட்டில் (Reddit) பெண்களின் தனிப்பட்ட விவரங்கள், அந்தரங்க ஒளிப்படங்கள், காணொளிகள் பகிரப்பட்டன. பிபிசி ஒரு பழைய சிகரெட் லைட்டரின் உதவியால், அத்தகைய ஒரு குழுவின் பின்னணியில் இருந்த ஒரு நபரின் முகமூடியை அவிழ்த்துள்ளது.
முத்தலாக் தீர்ப்பு இந்திய முஸ்லிம் பெண்களுக்கு உதவியிருக்கிறதா?
தீர்ப்பு வந்த சமயத்தில் பெண்ணுரிமையாளர்களால் அது கொண்டாடப்பட்டது. தீர்ப்பு வெளியாகி ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் தங்கள் வாழ்க்கை நிச்சயமற்றதாகி விட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
பொன்னியின் செல்வன் படத்தில் 'ஈழ நாடு' என்பது 'இலங்கை' என வருவது சரியா?
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், திரைப்படத்தின் ஒரு வசனம் இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹேங் ஓவருக்கு என்ன மருந்து? மது குடிக்கும்போது உடலுக்குள் என்ன நடக்கிறது?
மது குடிப்பவர்கள் அதிக எடையுடன் இருப்பதற்கு என்ன காரணம்? ஏன் வாந்தி வருகிறது? போதை தணிவதற்கோ அல்லது ஹேங் ஓவருக்கோ மருந்து ஏதேனும் இருக்கிறதா?
அறிவியல்
பல் தேய்ப்பது மூளைக்கு நல்லதா?
அமெரிக்கன் டெண்டல் அசோசியேசனின் அறிவுரைபடி, தினமும் இரண்டு முறை பற்களை சுத்தம் செய்வது, அதுவும் ஃப்ளூரைட் பேஸ்ட் கொண்டு சுத்தம் செய்வது சிறந்தது என்கின்றனர்.
வரலாறு
31,000 ஆண்டுக்கு முன்பே உறுப்பு நீக்க அறுவைச் சிகிச்சை செய்த குகை மனிதன்
"தற்போது உறுப்பு நீக்கும் அறுவைச் சிகிச்சை மிகவும் பாதுகாப்பானது. அறுவை சிகிச்சை செய்யும்போது மயக்க மருந்து தரப்படுகிறது, கிருமிநீக்கப்பட்ட சூழல் இருக்கிறது. ரத்தப்போக்கையும், வலியையும் கட்டுப்படுத்தும் வசதி இருக்கிறது. ஆனால் 31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எந்த வசதியும் இல்லாமல் இந்த சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது"
இலங்கை நெருக்கடி - சிறப்புக்கட்டுரைகளின் தொகுப்பு
இலங்கை நெருக்கடி - கட்டுரைகளின் தொகுப்புகள்
இலங்கை இப்போது சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடி, அதற்கான காரணங்களை அலசும் கட்டுரைகள், ஒரு மாதகாலமாக நடந்துவரும் போராட்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் வாசிக்கலாம்
சிறப்புச் செய்திகள்
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழ்நாட்டில் அனுமதி மறுப்பு ஏன்? ஆர்.எஸ்.எஸ். வரலாறு என்ன?
காந்தி ஜெயந்தி நாளில் தமிழ்நாட்டில் ஊர்வலம், பொதுக்கூட்டம் போன்றவை நடத்த எந்த அமைப்புக்கும் அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.
ஆய்வகங்களில் உருவாக்கப்படும் செயற்கை உயிரிகள் - உலகுக்கு அச்சுறுத்தலா? அனுகூலமா?
இந்த பூமியில் எண்ணிலடங்கா உயிரினங்கள் வாழும் நிலையில், அமெரிக்க, ஐரோப்பிய, மற்றும் ஆசிய நாடுகள் பலவும் ஒன்றிணைந்து ஆய்வகத்தில் செயற்கையாக பல உயிரினங்களை உருவாக்கியுள்ளனர். இந்த உயிரிகளைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது.
இரட்டைக் குழந்தைகள் அதிகமாகப் பிறப்பது செயற்கை கருவூட்டலின் விளைவா?
இரட்டை குழந்தைகள் கருவுற்ற காலத்தில் இருந்து அந்த தாய் அதிக சிக்கல்களை சந்திக்கவேண்டும். இரண்டு குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கவேண்டும். தாயும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும்.
இந்தியாவில் 5ஜி சேவை தொடக்கம்: இனி மொபைல் சேவை எப்படி வேகம் பிடிக்கும்?
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, அதன் 5G சேவையுடன் நாட்டின் ஒவ்வொரு மூலையையும் சென்றடையும் என்று அதன் நிறுவனர் முகேஷ் அம்பானி கூறியிருக்கிறார். முன்னோட்டமாக, டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா நகரங்களில் ஜியோ 5ஜி சேவை தீபாவளியன்று அறிமுகமாகும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
பொன்னியின் செல்வன்: எந்த அளவுக்கு விலகியிருக்கிறது பட காட்சிகள்
தற்போது வெளியாகியிருக்கும் திரைப்படத்தில் இந்த முதலிரண்டு பாகங்களில் உள்ள கதை வெகுவாக சுருக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, சில காட்சிகள் மாற்றப்பட்டும் உள்ளன.
இந்த வாரம் வெளியாகும் படங்கள், ஒடிடி தொடர்கள் எவை? எங்கு பார்க்கலாம்?
இந்த வாரம் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' வெளியாவதால், திரையரங்குகளில் 'நானே வருவேன்' படத்தைத் தவிர வேறு தமிழ்ப்படங்கள் ஏதும் வெளியாகவில்லை. ஆனால், ஓடிடிகளில் வழக்கம்போல தொடர்கள் வெளியாகின்றன.
'பொன்னியின் செல்வன்' என்றால் ராஜராஜ சோழனா? உண்மை என்ன?
வரலாற்றைத் தழுவி கற்பனைகளுடன் ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான் பொன்னியின் செல்வன். இன்னும் எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்தத் திரைப்படம் ஒரு 'தழுவலின் தழுவல்' என்று கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் தொடரும் லாக் - அப் மரணங்கள்: சென்னையில் ஒருவர் பலி
ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் உயிரிழந்த நிலையில், காவல்துறையினர் தாக்கியதால் தான் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தார் குற்றம்சாட்டுகின்றனர்.
அரிசி, கோதுமை, தின்பண்டங்களில் கலப்படமா? கட்டுக்கதைகளும் உண்மைகளும் #mythbuster
டிடர்ஜென்டில் உப்பு, அரிசி, கோதுமை, முட்டையில் பிளாஸ்டிக், பாலில் சீனாவின் மெலமைன் பவுடர் என பல கட்டுக்கதைகள் சமூக ஊடகங்களில் வைரலாகி கலக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஒரு பொய்யை நிஜம் போல இந்த கட்டுக்கதைகள் எப்படி உருவகப்படுத்துகின்றன? விரிவாக படிக்கலாம் இந்த கட்டுரையில்.
பரந்தூர் விமான நிலையம்: கிராமங்களில் காவல்துறையின் தீவிரக் கண்காணிப்பு ஏன்?
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரை ஒட்டி விமான நிலையம் அமைய இருக்கும் கிராமப் பகுதிகளில் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கிராமங்களை இணைக்கும் முக்கியச் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இது தங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக கிராம மக்கள் கூறுகிறார்கள்.
தொலைக்காட்சி
பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
30.09.2022
புகைப்பட தொகுப்பு
அன்பின் தருணமா? இரையின் இறுதி நிமிடமா? இந்த ஆண்டின் சிறந்த காட்டுயிர் ஒளிப்படங்கள்
இந்தப் படத்தில் காணப்படும் பொனோபோ குரங்கு, தனது அன்புக்குரிய செல்லப் பிராணியை போல ஒரு சிறிய கீரிப்பிள்ளையை கையின் கதகதப்பில் ஏந்தியிருக்கிறது. ஒருவேளை அப்படியில்லாமல், அந்த கீரிப்பிள்ளையின் தாயைக் கொன்றுவிட்டு குட்டியை இரவு உணவுக்காகக் கொண்டு செல்வதாகக் கூட இருக்கலாம்.
ஊடகவியல் கல்வி
ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்
ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்